ஜாவ் டித்தே காவ்
ஊழல் எல்லா இடங்களிலும் மலிந்து இந்த நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நிறைந்துவிட்டது. முகுந்தாவும், அவனது நண்பர்களும் அப்படித்தான் உணர்ந்தார்கள். பல்வேறு பட்டம் பெற்றிருந்தாலும், முகுந்தாவும், அவனது நண்பர்களும் வேலையின்றி இருந்தார்கள். எளிதில் நம்பிக்கை இழக்காத முகுந்தா, ஊழல் படிந்த அலுவலர்களுக்கு பாடம் புகட்ட ஒரு திட்டம் தீட்டினான். ஒரு கிணறுவெட்ட அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற்றான்.
