ஏ ஆர் ரஹ்மானுடன் இனிய இசை
ஹார்மோனி என்பது ஏ.ஆர். ரஹ்மானின் இந்திய இசை வரலாற்றையும் எதிர்காலத்தையும் அவரது பார்வையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்ச். இந்தியாவின் செறிவுமிக்க இசை வரலாறு, இதற்காக பிரத்யேகமாக தெரிவு செய்யப்பட்ட இசைகருவிகள் மற்றும் வாய்பாடல் முறைகள் மூலமாக வழங்கப்படுகிறது. நாட்டின் புவியியல், வரலாற்று வித்தியாசங்களை பிரதிபலிக்கும் ஒரு நிகழ்ச்சி. இத்தொடர் பாரம்பரியம், இசை கலைஞர்கள் மற்றும் இடங்களை ஆய்வு செய்யும்.
