கில்லர் கோஸ்டர்
பலவாஸ்-லெ-ஃப்ளோ,1998: இலாகாவால் புறந்தள்ளப்படும் எசகுபிசகான போலீஸ்காரி சாண்ட்ரின், பேய் ரயிலில் பிணத்தை கண்டெடுத்த பின், கண்காட்சியில் பஞ்சு மிட்டாய் விற்கும் பாவனையில் ரகசிய வேலையை செய்ய முடிவெடுக்கிறாள். குடும்பப் பகை கொண்ட கார்மென், ஈவான் எனும் இரு கேளிக்கை ஊழியைகளையும் அவள் சந்திக்கையில், மூவரின் இந்த பொருந்தாத குழு, கேளிக்கை மைதானமே கொலைகாரனது வேட்டைத் தளமாக இருக்கலாமென காண்டுபிடிக்கின்றது.
