டை ட்ரையிங்
2004ஆம் ஆண்டு பெங்களூரின் ஒரு கல்லூரியில் படிப்பை முடித்து வெளிவந்து சாதிக்க துடிக்கும் இரு இளம் கிட்டார் வாசிப்பவர்களின் கதை இது. துரதிருஷ்டவசமாக அவர்கள் அப்படி ஒன்றும் அதில் சிறந்தவர்கள் இல்லை. தாங்கள் சிறந்தவர்கள்தான் என்று உலகிற்கு நிரூபிக்க, குருட்டு நம்பிக்கையோடும் இரண்டு கிட்டார்களோடும் தளரா நம்பிக்கை கொண்ட குழு மேலாளரோடு கிளம்புகிறார்கள்.
