ஜகமே சங்கீதம்
தாத்தா சாஸ்திரியின் புகழ்பெற்ற கர்நாடக இசை மரபின் வாரிசான பாலு, கடமைக்கும் விருப்பத்திற்கும் இடையே தத்தளிக்கிறான். குடும்பப் பெயரைக் காக்கும் கட்டாயம், பெருகும் நிதி நெருக்கடி, பெரியப்பா தியாகராஜுவுடனான கருத்து வேறுபாடு அவனை நிலைகுலைக்கிறது. எதிர்பாரா கூட்டு முயற்சி வேறு வகை இசையை நோக்கி ஈர்க்கும்போது, குடும்பம், கலை, தனக்கு, செய்ய வேண்டிய கடமை என்னவென்று பாலு தீர்மானிக்கும் சூழல் உருவாகிறது.
